9 நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவைத் தங்கள் வீடுகளில் செயற்படுத்தலாம்..!

0

மேலும் 9 நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள், 14 நாள்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவைத் தங்கள் வீட்டிலேயே நிறைவேற்றலாம் என்று அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு தெரிவித்துள்ளது.

9 நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவைத் தங்கள் வீடுகளில் செயற்படுத்தலாம்..!
admin | My Blog

எஸ்டோனியா (Estonia), ஃபிஜி (Fiji), ஃபின்லந்து (Finland), ஜப்பான், நார்வே (Norway), தென் கொரியா, இலங்கை, தாய்லந்து, துருக்கி ஆகிய நாடுகள் அதில் அடங்கும்.

அந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகள், அடுத்த மாதம் 2ஆம் தேதி முதல், ஒதுக்கப்பட்ட வசதிகளில் உத்தரவை நிறைவேற்றுவதிலிருந்து விலகிக்கொள்ளலாம்.

ஆனால், அவ்வாறு செய்ய அவர்கள் 2 கட்டுப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும்:

  • கடந்த 14 நாள்களில் வேறு எந்த நாட்டிற்கும் சென்றிருக்கக்கூடாது.
  • அவர்கள் குடியிருக்கும் இடத்தில், உத்தரவை நிறைவேற்றுவோர் தவிர, வேறு யாரும் இருக்கக்கூடாது.
9 நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவைத் தங்கள் வீடுகளில் செயற்படுத்தலாம்..!
admin | My Blog

சிங்கப்பூரர்களும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளும் சிங்கப்பூர் வருவதற்கு முன்னரே விலகிக்கொள்வதாக Safe Travel Office இணையத்தளத்தில் பதிவு செய்யவேண்டும்.

மற்றவர்கள் சிங்கப்பூர் வந்த பின்னர் விலகிக்கொள்ளலாம்.

அனைத்துப் பயணிகளும் சிங்கப்பூர் வந்தவுடன் விலகிக்கொள்வதற்கான அனுமதியைக் காட்ட வேண்டும்.

மார்ச் 27ஆம் தேதிக்கு முன்பு சிங்கப்பூரை விட்டுப் புறப்பட்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோர் ஒதுக்கப்பட்ட வசதிகளில் உத்தரவை நிறைவேற்றும் செலவை, அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அரசாங்கம் ஏற்காது.

9 நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவைத் தங்கள் வீடுகளில் செயற்படுத்தலாம்..!
admin | My Blog

நீண்ட கால அனுமதி அட்டை வைத்திருப்போர் உட்பட, அவர்களின் மருத்துவச் செலவுகளையும் அடுத்த ஆண்டு முதல் அரசாங்கம் ஏற்காது.

அவர்களில் பெரும்பகுதியினர் ஏற்கெனவே சிங்கப்பூர் திரும்பிவிட்டதால், அந்த முடிவை எடுத்ததாகச் சுகாதார அமைச்சு கூறியது. 

Source & Image Credit :Media Corp

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here