வெளிநாட்டு ஊழியர்களுக்கான வீட்டுச் சலுகை..!

அமீரகத்தில்..

குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அபுதாபி அரசு தனது ஊழியர்களுக்காக புதிய வீட்டு வசதி கொள்கைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி அபுதாபி அரசு, ஊழியர்கள் வீட்டு அலவன்ஸ், கல்வி அலவன்ஸ்களை பெற அபுதாபியில் வசிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கொள்கைகளின் சிறப்பம்சங்கள் பற்றி அபுதாபி ஊடக அலுவலகம் சமூக ஊடகங்களில் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது.

அதன்படி அபுதாபியில் வசிக்கும் அரசு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் ஊழியர்கள், அவர்களின் வேலை கிரேடை பொறுத்து சிறப்பு சலுகைகளைப் பெறுவார்கள்.

அபுதாபியில் வசிக்கும் எமிராட்டி ஊழியர்கள் தங்கள் வேலை தரத்திற்கு ஏற்ப முழு வீட்டு வசதி அலவன்ஸ்களை பெறுவார்கள்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான வீட்டுச் சலுகை..!
admin | My Blog

அதே போல முதல் முறையாக அபுதாபியில் சொத்து வைத்திருக்கும் அல்லது வாடகைக்கு எடுத்திருக்கும் அமீரக குடிமகன் அல்லாத ஊழியர்களுக்கும் அவர்களின் வேலை தரத்தின் படி முழு வீட்டு உதவித் தொகை பெற உரிமை உண்டு.

இது நில உரிமையாளருக்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த கொள்கைகளை மனித வள ஆணையம் உருவாகியுள்ளது.

மேலும் தகுதியான ஊழியர்களுக்கு அபுதாபியில் உள்ள பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை கிடைக்கும் என்று ஊடக அலுவலகம் ஒரு ட்வீட் இல் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான வீட்டுச் சலுகை..!
admin | My Blog

ஊழியர்களின் நிலைமையை சரி செய்ய போதுமான நேரத்தை வழங்கும் வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கொள்கைகள் ஒரு வருடத்திற்கு பிறகு செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here