வெளிநாட்டு ஊழியர்களிடையே COVID-19 நோய்த்தொற்றை விரைவாகக் கண்டறியும் பரிசோதனை முறை அறிமுகம்..!

0

வெளிநாட்டு ஊழியர்களிடையே COVID-19 நோய்த்தொற்றை விரைவாகக் கண்டறிவதற்கு, Antigen Rapid Test எனப்படும் பரிசோதனை முறை அறிமுகம் செய்யப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களின் வழக்கமான சோதனைகளில் அந்தப் பரிசோதனை முறையைச் செயல்படுத்த மனிதவள அமைச்சும் சுகாதார அமைச்சும் முற்படுகின்றன.

தற்போது வெளிநாட்டு ஊழியர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வழக்கமான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அவர்களுக்கு Polymerase chain reaction (PCR) முறையில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இனி, Antigen Rapid Test பரிசோதனை முறை, கூடுதலாக, ஏழாவது நாளன்று மேற்கொள்ளப்படும்.

புதிய முயற்சியின்மூலம் அனைத்து ஊழியர்களும் 7 நாட்களுக்கு ஒரு முறை சோதிக்கப்படுவர்.
Antigen Rapid Test பரிசோதனையைக் கொண்டு செய்யப்படும் வழக்கமான சோதனைகள் இம்மாதம் 18 ஆம் தேதி தொடங்கி, ஒரு மாத காலத்துக்கு நடப்பில் இருக்கும்.

வெளிநாட்டு ஊழியர்களிடையே COVID-19 நோய்த்தொற்றை விரைவாகக் கண்டறியும் பரிசோதனை முறை அறிமுகம்..!
admin | My Blog

SCM Tuas Lodge வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடத்தில் வசிக்கும் ஆயிரம் வெளிநாட்டு ஊழியர்கள் அந்த முதற்கட்ட முயற்சியில் ஈடுபடவுள்ளனர். 

Source : Seithi Media

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here